×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ சித்திரக் கவி → கவிதைகள் → காடு போற்றுவோம் → இயந்திரப் பறவை → மூடு_செருப்பு(Shoe)தேவையா → எழுதவே நினைக்கிறேன்

ஆசிரியரிடமிருந்து‍ …!

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;

காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;

கான முண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்;

ஆதலினால் காதல் செய்வீர், உலகத் தீரே!

அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;

காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;

கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

- பாரதி

பொறுப்பு ஏற்பு

நான் காதலாய் இருப்பதால்

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் விளைந்த, விளைந்து கொண்டு இருக்கும், விளையும் பெருந்துயர்களைப் பற்றிய சிந்தனைகள் வராமல் இருக்கச் செய்கிறது இந்தக் காதல். இந்திய நாட்டின் பாரரளுமன்ற மக்களாட்சி என்பதைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்துக் கட்சிகளும் குறிப்பாக ஆளும் கட்சியும் செயல்படும் விதம் பற்றிய கவலைகளை இந்தக் காதல் மறக்கச் செய்து விடுகிறது.

அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு என்பதனை மறந்து வல்லான் வகுத்ததே நியதி என்று செயல்படும் பிரதமரின் போக்கு பற்றி எழுதவும் நேரம் இல்லாமல் இருக்கச் செய்து விட்டது இந்தக் காதல்.

அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு தன்னிடம் இருக்கும் பொறுப்பினை உணராது துதி பாடும் அமைச்சர்களின் செயல்களின் வேதனை எளிதாகவே மறந்து விடுச் செய்கிறது காதல். தமிழக ஆளுநர் வருங்காலத்தை தன் ஞானக் கண் கொண்டு வருங்காலத் தீர்பை கண்டு தெளிந்து மக்களின் நலன் கருதி செயல்பட்ட விதம் குறிந்து சொல்ல மெய் மறந்து இருக்கச் செய்து விடுகிறது காதல்.

தமிழகச் சட்ட சபை உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதியாக செயல்படாமல் தங்கள் தலைவர்களின் பிரதிநிதியாக செயல்படுவதைக் காணாமல் இருக்கச் செய்கிறது இந்தக் காதல்.

காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;

கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

நான் காதலாய் இருக்கின்றேன்.

நீங்களும்

ஆதலினால் காதல் செய்வீர், உலகத் தீரே!

- அழகன் ரா திருப்பதி

♣ ♣ ♣ 

கணையாழி நடத்திய குறும்படத் திரைக்கதை போட்டியில் முதல் பரிசாக நம் ஆசிரியர் குழுவில் த. அபர்ணாதேவி அவர்கள் கவிஞர் நா. முத்துக்குமார் நினைவுப் பரிசும் ரூபாய் 10,000/- பெற்று உள்ளார்கள். த. அபர்ணாதேவி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்.

♣ ♣ ♣ 

நம் இதழில் கவிதைகள் எழுதி வரும் ரா சிவக்குமார் அவர்களின் தந்தை திரு. ராஜு அவர்கள் இயற்கை அடைந்தார்கள். ரா சிவக்குமார் அவர்களின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.