×

• ஆசிரியரிடமிருந்து‍

• விண்ணை வளைக்கப் புறப்படு • நிறைகளைப் போற்றுங்கள் • நரபலி • பெண் - ஒரு பெண்ணின் பார்வையில் • மரத்தை வெட்டுவோம், நாட்டைக் காப்போம் • கவிதைகள் • எழுதவே நினைக்கிறேன் • நேர்காணல் • ஒடுக்க நிலை

ஆசிரியரிடமிருந்து‍ …!


நிலா, புது நிலா அன்று நம் கண்களுக்கு நிலா தெரியாமல் நம்மால் வரையறுக்க முடியாமல் முழுமையான கருமையாய் வான் முழுவதும் இருப்பது போல் ஒரு நிறைவினைத் தரும் நாள். நாட்கள் மாற மாற மீண்டும் புது‍ நிலா வரும். அது‍ போல கருப்பன் ஒவ்வொரு‍ காருவா அன்றும்‍ புதிய கருத்துகளுடன் உங்களைச் சந்திக்க வருவான்.

காருவா அன்று காணப்படும் காருவா இருட்டு போல் முழுமையாக, கருப்பன் எவ்வித வரையறைக்குள் உள்ளாகாமல் கருத்துகள் மற்றும் மாற்றுக் கருத்துகள் உள்ளன என்ற உண்மையின் வழி கொண்டு‍ அனைத்துக் கருத்துகளும் இடம் கொடுத்து‍ ஒவ்வொரு காருவா அன்றும் வெளிவருவான். கருப்பன் எந்தவொரு‍ கருத்துகளுக்கும் மாற்றுக்‍ கருத்துகளுக்கும் சிறந்ததொரு‍ களமாக அமைந்து‍ புதிய சிந்தனைகளுக்கு‍ வழி வகுப்பான்.

கருப்பனுக்கு ‍ எவ்வித உள்நோக்கமும் கிடையாது‍ வெளி நோக்கமும் கிடையாது. கருப்பன் வெளிப்படையானவன். கருப்பன் பழமை, புதுமை, இனிமை, கடுமை எனப் பல விதமான கருத்துகளுக்குக்‍ களம் அமைத்துக் கொடுப்பான்.

வானில் இருக்கும் விண்மீன்கள் நிலாவினால் ஈர்க்கப்படுகின்றன. கருப்பன் பல துறைகளின் பதிவுகள் கொண்டு‍ இருப்பான். கருப்பனின் களம் எல்லைகளுக்கு‍ உட்பட்தன்று.

கருப்பன் இப்படி என்று‍ வகைப்படுத்த முடிவது‍ போலும் இருக்கும் முடியாமலும் இருக்கும், கருப்பன் ஒருவன். ஆனால் பலதரப்பட்டவனாக காட்சி தருவான். நிலா வளர்வது‍ போலும் தேய்வது‍ம் போலும் நம் கண்களுக்குத்‍ தெரிந்தாலும் உண்மையில் நிலா என்றும் தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை. அவ்வாறு‍ நம் கண்களுக்குத்‍ தெரியாத உண்மைகளையும் கருப்பன் தெரிய வழி செய்வான்.

கருப்பன் என்ற பெயரினை வைத்து தாங்களகாகவே தங்களுக்குப் பிடித்த முத்திரையினை கருப்பனுக்கு இட்டுக் கொள்ளாதீர்கள். கருப்பன் பக்தி வழி வந்தவன் என்றோ, கருப்பன் ஆன்மிகவாதி என்றோ, கருப்பன் புரட்சியாளன் என்றோ அல்லது மேலும் இது போல வேறு கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். கருப்பன் எவ்வித முத்திரைக்கும் அப்பாற்பட்டவன். முத்திரைக்குள் அடக்கக் கூடியவனும் அல்லன். சில நேரங்களில் பக்தி அவனுக்கு வரும் சில நேரங்களில் அவன் நாத்திகம் பேசுவான். சில தருணங்களில் அமைதியின் சிகரமாக காட்சி தருவான். சில சமயங்களில் புரட்சியாளனாக வலம் வருவான். கருப்பன் காருவா இருட்டை நிறமாகக் கொண்டதினால் கருப்பன் என்ற பெயர் கொள்ளப்பட்டவன்.

கருப்பன் தன் பயணத்தினை தை புது நிலா (27/01/2017) முதல் தொடங்குகிறான். ஒவ்வொரு புது நிலா அன்று உங்களிடம் தன் கருத்துகளினையும் மற்றவர்களின் கருத்துகளையும் கொண்டுவருவான். நீங்களும் கருப்பனின் பயணத்தில் இணைய வாருங்கள்.

பற்பல சொற்கள்

பற்பல கருத்துகள்

பற்பல சுவைகள்

கருப்பனின் ஒவ்வொரு‍ பக்கங்களும்

இக்களத்தில் உங்களின் எண்ணங்களைப் பதிவு செய்ய மற்றவர்களின் எண்ணங்களை அறிந்துகொள்ள, அவற்றை மறுக்க, மறுதலிக்க அல்லது அவற்றை ஏற்பதற்கான காரணங்களைக் கூற அன்புடன் கருப்பன் அழைக்கின்றான்.

- அழகன் ரா திருப்பதி