×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ கவிதைகள் → உடல் மொழி உணர்வோம்! → கவிதை → மிறைக்கவி – சித்திர கவி → திரைப்படம் - சரக்கு மற்றும் சேவை வரி - போராட்டம் → கவிதை → ஒற்றைப் பனை → கவிதைகள்

ஆசிரியரிடமிருந்து‍ …!


... ... ... ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே

...................................

என்பது கணியன் பூங்குன்றனார் தமிழர்களின் பண்பாட்டை பறை சாற்றி கூறும் விரிகள்.

ஆனால் தற்போது நாம் வரலாறுகளை மறந்து, நம் பண்பாட்டினை மறந்தும், நம் வழிமுறையினர்களுக்குத் தவறான கருத்துகளை கற்றுத் தருபவர்களாக மாறி வருகிறோம். நம் பண்பாட்டினை அழிக்கும் வழிகளுக்கு நாமே துணை செல்கிறோம். பண்பாட்டின் அழிவு இனத்தின் அழிவு என்று தெரியாமல் மற்றவர்களின் பண்பாடு தான் உயரியது என்ற தவறான எண்ணத்துடன் அவர்களின் பண்பாட்டினை ஏற்றுக் கொண்டு நம் பண்பாட்டினை அழிக்கிறோம். மேலும் நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். நம் அழிவினை நாமே தேடிக் கொள்கிறோம். குரு பூர்ணிமா எனப் பெயர் கொண்டு ஆசிரியர்களுக்குப் பாத பூசை மேற்கொள்ளும் செயலை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான பாத பூசையினை ஏற்றுக் கொண்ட ஆசிரியர்களின் செயலையும் நாம் கண்டித்தே ஆக வேண்டும். இத்தகையப் பண்பாட்டுத் தாக்குதல்களை நாம் முளையிலே கிள்ளி ஏறிய வேண்டும். ஒரே நாடு ஒரே வரி மேலும் பல ஒரே..... என்ற கொள்கையின் வழிக் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்பதனை மறந்து அனைத்தையும் ஒன்றாக்கி விட வேண்டும் என அரசு உறுதி கொண்டு செயல்படுகிறது. நம் நாட்டின் நாட்டுப் பண் திரையரங்குளில் நீதிமன்ற உத்திரவின்படி இசைக்கப்பட்டு வருகிறது. ரவிந்திரநாத் தாகூர் வங்காளி மொழியில் இயற்றிய "சன கண மன" தான் நம் நாட்டின் நாட்டுப் பண் ஆகும். இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு அப் பாடலுக்கான தணிக்கை சான்றிதழில் இந்தி என வழங்கியுள்ளது. இவ்வாறு அனைத்தையும் ஒன்றாக்குவதை நாம் பாராட்டுவதோ அல்லது .........

பண மதிப்பு நீக்கம் என்ற நடவடிக்கை கொண்டு வந்து சில மாதங்களுக்கு மக்கள் கையில் இருந்த பணத்தினை செல்லாதாக்க எவ்வித பொருட்களையும் வாங்க முடியாமல் செய்தது அரசு. தற்போது புதிய சரக்கு மற்றும் சேவை வரி என்ற காரணத்தினால் விற்பனை கூடங்களில் பொருட்கள் இல்லாத நிலையாக்கி மக்களைத் துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது அரசு. இவற்றுக்கு அரசின் பதில் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதாக இருக்கிறது. அரசு தன் வேலையினை விட்டு சோதிடர்களாக மாறும் அவல நிலையாக மட்டுமே உள்ளது. நாம் மீண்டும் ஞாபகப் படுத்துகிறோம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பண மதிப்பு நீக்கம் பற்றி பாராளுமன்றத்தில் பேசும் போது மேற்கொள் காட்டிய பொருளாதார மேதை கெய்ன்சு அவர்களின் வார்த்தைகளை "In the long run we are all dead" (எதிர்காலத்தில் நாம் அனைவரும் இறந்து விடுவோம்).

இவற்றையெல்லாம் எதிர்க்க நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தலில் வாக்கு மட்டுமே.

தீதும் நன்றும் பிறர்தர வாரா

என்ற கணியன் பூங்குன்றனார் வார்த்தைகளை என்றும் நம் உள்ளத்தில் இருத்தி நம்மை நம் பண்பாட்டினை தற்காத்துக் கொள்வோம்.

- அழகன் ரா திருப்பதி