×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ ஆட்சி மொழி →  கவிதை → ஆசை மனம் மாறுமா → கவிதை → சில்லென ஒரு மழைத்துளி → கவிதை → அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள் → கவிதைகள்

கருப்பன் - முந்தைய நிலாக்கள் ...

ஆட்சி மொழி

- செம்மை நதிராசா

ஆட்சி மொழி

- செம்மை நதிராசா


விடுதலை பெற்ற இந்திய வலுவாக வேண்டும் இந் நோக்கத்தை ஈடேறச் செய்ய எழுந்ததே மொழிவழி ராச்சியப் பிரிவினை. அவ்வவர் மொழி ஆட்சி மொழியாகி ஆங்குள மக்களொடு நெருக்கமான நல்லுறவு எழுவதுற்கும் அம் மொழி பேசுவோர் தத்தம் மொழியிலேயே பேசவும், எழுதவும், பரிமாறிக் கொள்ளவும், சிந்திப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தும் செயலாகும்.

மெட்ராசு மாகாணத்திலிருந்து நமக்கு உரிய வேங்கடம் எனப்படும் திருப்பதியொடு தெலுங்கு பேசும் ராச்சியம் பிரிந்து சென்றது.

திருவாங்கூர்ப் பகுதியாக இருந்தவற்றுள் தேவிகுளம் - பீரிமேடு பகுதிகள், நமக்குக் கிடைக்கவில்லை. கேரளத்தாருக்கு உரியதாயிற்று.

திருவண்ணாமலைப் பகுதிகள், திரு. ம. பொ. சிவஞான கிரமணியாரின் தமிழ் தேசியக் கட்சியின் பெரும் போராட்டத்தாலேயே தமிழகப் பகுதியாக மாறின.

திருவிதாங்கூர்ப் பகுதியொடு இணைந்து இருந்த குமரி மாவட்டம் (கன்னியாகுமரி மாவட்டம்), தந்தை நேசமணி அவர்களின் தலைமையில் நடந்த பெரும் போராட்டத்தின் வாயிலாகவே தமிழகப் பகுதிகளாக மாறின.

இவை அனைத்தும் சேர்ந்த பகுதிகள் சென்னை மாகாணம் - மெட்ராஸ் ஸ்டேட் என்றே வழங்கப்பட்டது. இதனைத் தமிழ் நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்று விடுதலைப் போராட்டத் தியாகி, விருதுநகர் திரு. ச. சங்கரலிங்கனார் அவர்கள் சாகும் வரை உண்ணா நோன்பு (உண்ணாவிரதம்) மேற்கொண்டார். அப்போதைய ஆளும் வர்க்கக் கல் நெஞ்சர் பொருட் படுத்தவில்லை. அதனால் உண்ணா நோன்பு இருந்த அன்னார் தம் ஆருயிரைக் காவு கொடுத்தார். இப் பேரிழப்புக்குப் பின்னர் வெள்ளையுரினும் கொடியவர் என்றே ஆளுவோர் தம்மைக் காட்டிக் கொண்டனர்.

தமிழ்நாடு தோற்றம் கொண்டதன் அரும் நோக்கமான தமிழை முன்னெடுத்துச் செல்வதற்கான உணர்வு மழுங்கியவரின் ஆட்சி என்றே மெய்ப்பிக்க நேர்ந்தது. மனித உயிர், மதிப்பற்றதா? தியாகி ஒருவரின் ஆருயிர் இழக்கக் காரணமாக இருந்த ஆளுவோரின் செயல் ஒரு கரும் புள்ளியே.

பின்னர் அறிஞர் அண்ணா தலைமையில் நாடு வந்த பின்னரே தமிழ் நாடு என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழே சட்ட அவையில் முதன்மை பெற்க் கால் கோலிடட்பட்டுத் தமிழ் ஒலிக்கத் தலைப்பட்டது. பல சொற்கள் தமிழாக்கப்பட்டன. வேட்பாளர் (அபேட்சகர்), அவை(சபை), அவைத் தலைவர்(சபாநாயகர்), அமைச்சர்(மந்திரி) எனத் தமிழாக ஆக்கப்பட்டன. தி.மு.க. வின் தலைமையில் உருவான நிருவாகத்தில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆயினும் பின்னர் இவற்றிலும் சோர்வு ஏற்பட்டுள்ளதே!

ஆட்சி மொழி தமிழாக இருந்தும் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், கார்ப்பரேசன்கள் போன்றவற்றில் தமிழே முழுமையாகக் கொண்டு வரப்படவில்லையே. தமிழுக்கான வழங்கு சொற்கள் போதுமான அளவில் எழவில்லையே. அதற்கான சிந்தனைகளும் மழுங்க நேர்ந்துள்ளவே.

தாசில்தார், வட்டாட்சியர் ஆகிவில்லையே. சமர்பிக்கிறோம், புகார்கள், முகாந்திரம் விரட்டப்படவில்லையே. வேற்று மொழிக்கும் அடிமைப்பட்டுக் கிடப்பதா? தமிழைத் தூய்மைப்படுத்த வேண்டாமா? கன்னித் தமிழாகக் கவின் தோற்றம் கொள்ள உழைக்க வேண்டுமே.

இதே கால எல்லையில் நடுவண் அரசு இந்தியை ஆட்சி மொழியா்கிற்று இராசேந்திர பிரசாத் சனாதிபதியாக இருந்தார். இந்தி ஆட்சி மொழி எனும் சட்ட வரைவு தாக்கல் ஆனபோது சரி சம நிலை இருந்த போது ஜனாதிபதி தம் வாக்க அளித்தே அச் சட்ட வரைவு நிறைவேறியது.

அக்காலத்தில் நேருவின் தலைமையில் அதனை நிருவாகத்தில் புகுத்திய போதே தமிழ்நாடு கொந்தளித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப் பெறவே தமிழ் நாடு மன மாற்றம் பெறும் வரை ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்கும் என நேரு வாக்குக் கொடுத்தார். ஆயினும் இந்தி புகுந்து கொண்டேதான் இருக்கறது.

தொடர் வண்டி நிலையங்களில் இந்தியே முதன்னை பெறச் செய்யப் பலமுறை முனைந்துள்ளனர். பின்னேரே நாட்டு மொழிக்குப் பின்னர் இந்தி இடம் பெற்றுள்ளது. அடுத்து நம் பகுதிகளில் ஆங்கிலமும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆட்சி மொழியாக இங்குப் பேசப்படும் தேசிய மொழி யாவும் ஆக்க வேண்டும் என்றே திராவிட முன்னேற்றக் கழகம் கூறி வந்துள்ளது. இதுவே அண்ணாவின் ஒப்பற்ற வாதமாகும். இதனை ஏற்றுப் போற்றினாலே இந்திய ஒருங்கிணைப்பு உணர்வு பூர்வமாகவும் நிலைத்து நிற்கும்.

ஆட்சி மொழிச் சிக்கல் என்னும் மண்டையடி தீர

அமிர்தாஞ்சனமே வேண்டும்.

ஆம் அதில் தான் அனைத்து மொழிகளிலும் அதனைப் பற்றிய சுற்றறிக்கை எனப் பாடினார் திரு. த. அய்யாத்துரை அவர்கள், கோவில்பட்டிக் கம்பன் கழகப் பாட்ரங்கில்.

எத்துணை எளிய மருத்துவம்! ஆனால் இதனைச் செயலாக்க ஒருவரும் முனையவில்லையே. நடுவண் அரசின் நிருவாகத்தில் பங்கு பெற்ற தி.மு.க. வினர் கூட இதனைச் சாதிக்க முன்வரவில்லை. அமைச்சராகுவதில் தன் முனைப்புக் காட்டிப் பெற்றனர்.

நாடு அனைவருக்கும் சொந்தம் எனும் உணர்வை ஊட்டும் இத்தகைய செயல்பாடுகளைத் திமுக வினரும் பிற்றைக் கட்சிகளும் அதில் முனைப்புக் காடிட முன் வராதால் தான் தமிழுக்குரிய முன்னேற்றம் காணப்படாமலேயே தேங்கி நிற்கிறது.

நடுவண் அரசினர் நாம் இந்திக்கு மட்டுமே உரியவர் அல்லர். அனைத்து மொழியினர்க்கும் சொந்தமானவர் என்ற உணர்வு எழுந்தாலே இந்திய வலுப்படும்.

இந்தி என்னும் மொழியால் அனைத்து மொழிகளையும் ஒழித்து நிலை பெறுவோம் எனும் நிலையிலேயே இருந்தால் நாடு எங்ஙன் ஒன்றிய உணர்வுடன் திகழ முடியும்?

ஓர் அஞ்சலட்டை அதில் அனைத்து மொழிகளும் இடம் பெறச் செய்து வெளியிடலாம், அதற்கெனக் காசு ஒன்றும் கூடிவிடாது, ஆனால் அதற்கான எண்ணம் வேண்டுமே! அது வந்தாக வேண்டுமே.

பணவிடைத் தாள்களில் அவ்விடத்திய மொழி இடம் பெறச் செய்தாலே அப் பகுதி மக்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தொடர் வண்டி நிலையங்களிலும் நடுவண் அரசு அலுவல் பலகைகளிலும் அனைத்து மொழிகளையும் இடம் பெறச் செய்ய் முற்பட வேண்டும்.

கிறித்தவ மதத்தினர் தம் மதத்தைப் பரப்ப எல்லா மொழியிலும் பைபிளை அச்சிட்டுத் தருகின்றனரே.

தமிழர்க்கு ஆங்கிலம் அன்னிய மொழியே. அது போல் இந்தியும் அன்னிய மொழியே.

இந்திக்கு அஞ்சி ஆங்கிலத்துக்குத் தஞ்சம் புகுவது தமிழுக்கு இழுக்கே! தமிழைத் தலை நிமிர்த்த வேண்டும் எனில் தமிழ் நாட்டு அரசாங்கப் பணிகளுக்குத் தமிழ் வழிக் கல்வி கற்றவர்க்கு வேலை என் மாற்றினாலே இதனைச் சாதிக்க முடியும். அவராலேயே தமிழ்ச் சொற்களை இடம் பெறச் செய்யும் முயற்சிக்கு ஏற்ப ஆட்சித் தமிழ்ச் சொற்கள் பாடங்களாகவும் ஆக்கப்பட வேண்டும்.

தமிழ் மொழி அல்லாதோர், ஆங்கில வழிக் கல்வி கற்றோர் வேற்று நாட்டிலும், கணினி உலகிலும் சிறக்க முடியும். ஆதலின் துறைக்கு உரிய நல்ல தொண்டாற்றித் தமிழ் வழிச் சிந்தனையை மலரச் செய்து அதன் மணத்தை நாம் அனைவரும் பெற்று மகிழ்வோம்.


கோவில்பட்டி கம்பன் கழகத்தை நிறுவி நடத்தி வருபவர். கோவில்பட்டி பசுமை இயக்கத் தலைவர்.