×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ ஆட்சி மொழி →  கவிதை → ஆசை மனம் மாறுமா → கவிதை → சில்லென ஒரு மழைத்துளி → கவிதை → அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள் → கவிதைகள்

கருப்பன் - முந்தைய நிலாக்கள் ...

கவிதை

- ப. புவனகிருபாதேவி


கவிதை

- ப. புவனகிருபாதேவி


பேரின்பம்

எண்ணத் தொலையாத இன்பம் தரும் பேழையிது

இனிய குழலோசையினை ஈடுசெய்ய இயலாதே

யாழின் மயக்கமும் குழந்தை மயக்கத்திற்கு ஈடாகா

குழலினது யாழினிது என்போர் மழலை மொழி கேட்டதில்லை

தவழும் தனியழகும் நடைபயிலும் பேரழகு தனித்

தமிழ் நயம்போல் குறைவில்லா இன்பச்சோலை

குழந்தையோடு பழகுதற்கோ குழந்தை மனம் தேவை

பெருமை, கௌரவம் அத்தனை ஒதுக்கிவிட்டால் குழந்தை நாமாவோம்

குழந்தைச் செல்வம் வந்தால் எல்லாம் கூடிவரும்

கல்வியும் புகழும் வற்றாத நவநிதியும் அணிவகுக்கும்

அள்ளிக் குவித்திட்ட பெருஞ்செல்வம் ஆன போதிலுமே

மழலை ஒன்று வேண்டியே நாளும் தவமிருப்பார்

திரை இசைப்பாடல்களில் போற்றாத கவிஞரில்லை

மருத காசியென்ன, கண்ணதாசன் என்று

புலவர்கள் ஆயிரமாய் போற்றியே பாடிடுவார்

என்னதான் பாடினாலும் மழலை மொழி கேட்டதற்கு ஈடாமோ

செல்வக்குழந்தையவள் இல்லத்திற்கு வந்து விட்டால்

வயது சென்ற மூத்தோரும் இளைஞராய் மாறிடுவார்

குழந்தை பெற்ற தாயவளும் பூரிப்பாய் மனம் மகிழ்வாள்

அள்ளக் குறைவிலாச் செல்வம் மழலை இன்பம் தரும்

நாளும் அவள் புகழால் உலகோர் மகிழ்ந்திருப்பார்

நல்ல குழந்தைகளை பேணி நாட்டுக்களித்தால்

நாடும் நலம் பெறுமே எந்நாளும் உயர்வு பெறும்

எண்ணித் தொலையாத குழந்தை இன்பம் குறையாத பேரின்பம்