×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ ஆட்சி மொழி →  கவிதை → ஆசை மனம் மாறுமா → கவிதை → சில்லென ஒரு மழைத்துளி → கவிதை → அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள் → கவிதைகள்

கருப்பன் - முந்தைய நிலாக்கள் ...

கவிதை

- ப. சக்திகுமார்


கவிதை

- ப. சக்திகுமார்


ஊட்டி எழில் குழந்தை

தவழ்ந்து வரும் மேகத்தூடே மெதுவாக தவழ்ந்து சேர்ந்தேன்

எழில் குழந்தையவள் மலர்கரத்தால் எனை அழைத்தாள்

எழிலார் பட்டுச் சேலையென தேயிலை தோட்டம் சூழ

உச்சத்துச் சுட்டியென தொட்டபெட்டாவை கண்டேன்

நாளும் உழைத்திருக்கும் மக்கள் கூட்டம் சேர

நாளும் நடந்து வந்தேன் மலர்க்கூட்டம் காண்பதற்கே

உழைத்துக் களைப்படைந்தோர் ஓய்வாய் நின்றிருக்க

வண்ண மலர் கன்னியவள் என்னை அருகழைத்தாள்

கன்னியும் அவளே சிறுமியும் அவளே எனக் காட்சி தர

சுற்றி சுற்றி வந்துவிட்டேன் மனத்தில் நிறையவில்லை

புகைப்படக் கருவி கொண்டு அவள் அழகை சிறைபிடிக்க

என்றாலும் திருப்தியில்லை படகுக்குழாம் என்னை

பரிவுடனே அழைத்திடவே வண்ணச் சிறுமியென

படகுடனே ஊர்ந்து சென்றாள் நாளும் தொடர்ந்திட்டேன்

அவள் என்னை வழிநடத்த பின் தொடர்ந்து நான் சென்றேன்.

ரோஜா மலர்க்கூட்டம் அவள் சிரிப்பைக் காட்டியதே

எண்ணத் தொலையாத வண்ணமலர்ச் சோலையது

திகைத்து நின்றிருந்தேன் அவளழகில் மயங்கிவிட்டேன்

நடைபாதையழகினிலே என்னை மறந்து தொடர்ந்திருந்தேன்

சலிப்புத் தட்டாத அள்ளக்குறையாத இன்பமிது

ஊட்டி எழில் குழந்தை பருவ மங்கைதானாள்

எண்ணக் குறையாத கவியின்பம் தந்து விட்டாள்

பிரியமனமின்றி ஏக்கத்துடன் பிரிந்து வந்தேன்

மீண்டும் மீண்டும் காண்பதற்கு ஏழு பிறப்பும் தொடர்ந்திருப்பேன்.