×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ ஆட்சி மொழி →  கவிதை → ஆசை மனம் மாறுமா → கவிதை → சில்லென ஒரு மழைத்துளி → கவிதை → அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள் → கவிதைகள்

கருப்பன் - முந்தைய நிலாக்கள் ...

கவிதை

- க. கிருஷ்ணன்


கவிதை

- க. கிருஷ்ணன்


தமிழ்க்குழந்தை


தமிழ் என்னைத் தாலாட்ட மயக்கத்தில் நானாழ்ந்தேன்

வண்ணமலர்ச் சோலையினில் நான் துயில் கொண்டு விட்டேன்

இலக்கியச் சோலைதனில் என்னை மறந்து நின்றிருந்தேன்

வரிசை வரிசையாய் பெரும்புலவர் அணிவகுத்திடவே

என் அப்பன் அகத்தியனும் மிடுக்குடனே வீற்றிருந்தான்;

வியப்பில் ஆழ்ந்திருக்க தொல்காப்பியனும் தொடந்திருந்தார்

எண்ணத் திகட்டாத இலக்கணங்கள் அவர் படைத்தார்

வற்றாத காவிரியாய் பெருக்கெடுக்கும் இலக்கியங்கள்

குமரிக்கடல் கொண்ட பெரும்பூமி கண்ணில் வந்திடவே

முதற்சங்கம் கண்ட பாண்டியரும் வீற்றிருந்தார்

அருந்தமிழ் காப்பியங்கள் அணி செய்து மகிழ்ந்திருந்தார்

முச்சங்கம் கண்ட நாடு பெருமையுடன் முன்நின்றதுவே

பெரும்புலவன் நக்கீரனுமே செருக்குடனே வீற்றிருக்க

ஈசன் உடன் வந்து வாதிட்ட கோலம் கண்டேன்

எவர்க்கும் அஞ்சாது தமிழ் பெரியான் நக்கீரன்

சுட்டுச் சாம்பலானாலும் தமிழ் மணம் பரப்புகின்றான்

பெரும் மூதாட்டி ஒளவையுமே அழகுடனே வீற்றிருந்தாள்

முப்பாலும் கரை கண்ட பெருமைமிகு வள்ளுவனும்

அணியாய் அணியாய் குறளை சபை முன்னே படைத்துவிட்டான்

எண்ணத் தெவிட்டாத இலக்கிய இன்பம் கண்டேன்

கனவிதுதான் என்றாலும் நாளும் மறக்கிலனே

எத்தனை அழகு தமிழன்னை வந்து வீற்றிருந்தாள்

குழந்தையாய் நாம் கண்ட காட்சி வளர்ச்சியடையவே

இளமைப் பொலிவு மாறா அழகுடனே அவளிருந்தாள்.