×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ பட்டாசுகளைத் தவிர்த்துப் பயன் பல பெற்றிடுவோம் → கவிதை → யோக நல வாழ்வு → கவிதைகள் → தூய்மை

கவிதைகள்

- ரா சிவகுமார்


மலர் விழி

மலர் விழி மலர்ந்தும்

உன்மன(ண)ம் அறியா தவிப்பில்

உன் திசை தவிர்த்தேனடி!

சற்றே இதழ் விரித்தேனும்

உன் உள்ளம் உறைத்தால்

என் கற்பனைக் கலக்கம் தீர்வேனடி!‎

இயல்பு

கற்பனைக் குதிரை ஏறி

இடம் பல கடந்து

இயல் நிலை மறப்பதேனோ!

சற்றே நிமிர்ந்து

சுற்றம் தெளிந்து

விளையாடு உரையாடு!

தெளிவாய் இயல்போடு


காலம் கரைத்த கற்பனையைக் கவிதையாய் வடிக்க முயற்சி செய்பவர்.